இங்கிலாந்து வாழ் தமிழ் நெஞ்சங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும்; அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்
பல ஆயிரம் மைல் கடந்து இங்கிலாந்து மண்ணில் வாழ்ந்து தமிழ் மக்கள் ஒன்று கூடி சங்கம் அமைத்து அதன் வாயிலாக மக்களை ஒன்று படுத்தி மேடை நிகழ்ச்சிகள் நடத்தி, உறுப்பினர் சேர்க்கையை பெருக்கி இன்று இந்த மேன்மையான நிலையை எட்டியிருப்பது தன்னலம் கருதாத தமிழ் போற்றிய தன்னார்வலர்களால் என்றால் அது மிகை ஆகாது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் தம் பெயர் கூட அறிவிக்காமல் உழைத்து தமிழர் ஒற்றுமை வளர்த்த உத்தமர் ஏராளம்.
39 வருட மதிப்பு மிக்க வட தமிழ் சங்கத்தின் தலைமை பொறுப்பு ஏற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் துவங்க இருக்கும் புதிய பயணம் நம் தமிழ் சமூகத்தின் சங்கமம், ஒத்துழைப்பு, திறன் பகிர்வு மற்றும் சமூக ஈடுபாட்டை மேலும் செழிப்புற செய்யும் என நம்புகிறேன். தற்போதைய நிர்வாக குழு மிகவும் முற்போக்கு சிந்தனையும் , ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது. இத்தகைய குழுவுடன் பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
2025-26 ஆண்டுக்கான குழு
Mr ஜோசப் கருணா (தலைவர்)
Mr சுரேஷ்குமார் சண்முகசுந்தரம் (துணை தலைவர்)
Mr. இன்பராஜ் பாஸ்கரா (பொருளாளர்)
Mr. ரவி நடராஜன் (துணை பொருளாளர்)
Dr தாமோதரன் காமாட்சி (செயலாளர்)
Mrs. சுவிதா நாகராஜன் (துணை செயலாளர்)
இத்தருணத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் NTAஇக்கு வழங்கும் அபாரமான அர்ப்பணிப்பையும் அயராத ஆர்வத்தையும் பாராட்டி நம் பந்தம் மேலும் வலுவடைய உங்கள் நல் ஆதரவை தொடர்ந்து நல்கி எங்களை முன்னோக்கி செல்ல ஊக்குவிர்ப்பீர்கள் என நம்புகிறேன்.
தீபாவளி நிகழ்ச்சிகள்
எங்கள் தீபாவளி கொண்டாட்டம் 2025 அக்டோபர் 18 ஆம் தேதி மான்செஸ்டரில் உள்ள வ்ய்தீன்ஷாவ் போரும் (Wythensawe Forum) மண்டபத்தில் நடைபெறும். எங்கள் வருடாந்திர மின் இதழான தென்றலுக்கான பதிவுகளுக்கான விவரங்கள் அறிவிக்கப்படும். பத்து மண்டலங்களுக்கான இசை,நடனம், நாடக போட்டிகள் மற்றும் விருந்து கலைநிகழ்ச்சிகள் அன்று நடை பெரும்.
பேச்சுப் போட்டிகள்
வட தமிழ்ச் சங்கம் ஏற்பாட்டிலான பேச்சுப் போட்டிகளை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திட்டமிட்டுள்ளோம். ஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் தமிழ்ப் பள்ளிப் பிள்ளைகளுக்காக, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நமது சங்கத்தால் இந்த பேச்சுப் போட்டி நடத்தப்படவிருக்கிறது. நம் சங்கத் துணைத் தலைவர் திரு. ஜோசப் கருணா அவர்கள் இந்தப் பேச்சுப் போட்டியைப் பொறுப்பேற்று நடத்துகிறார். உங்கள் இருப்பிடம் சார்ந்த தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு ஊக்கம் அளித்திட அன்பு கூர்ந்து வேண்டுகின்றேன்.
தமிழ்ப் புத்தாண்டு இன்னிசை நிகழ்ச்சி:
2026 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தின விழாவை ஏப்ரல் மாதத்தில் கொண்டாடுவது என்று தற்காலிகமாக முடிவு செய்துள்ளோம். அந்த விழா நாளில், சென்னையிலிருந்து கலைஞர்கள் வருகைதந்து பங்கு கொள்வர். பல்வகைக் கலை நிகழ்ச்சிகளும் வேடிக்கை நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெறும்.
நிர்வாக குழு பொதுகூட்டம்
வட தமிழ் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் கூட்டம் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

President Message
“Love begets desire and that (desire) begets the immeasurable excellence of friendship”
My warm wishes to the Tamil hearts living in England. It is not an exaggeration to say that the Tamil people, having crossed thousands of miles to live on English soil, have come together to form an association through which they unite people, conduct stage events, increase membership and have reached this esteemed position today due to selfless Tamil-loving volunteers. There are numerous noble individuals who have worked for each event without even announcing their names, fostering Tamil unity.
I am very happy to take on the leadership role of the respected North Tamil Association, which has 39 years of esteem service. I believe that the new journey we are about to begin will further enrich the convergence, cooperation, skill-sharing, and social engagement for our Tamil community. The current administrative team is very progressive and capable with whom I am very pleased to be a part of.
The team for 2025/26 is
- Mr. Joseph Karuna (President)
- Mr SureshKumar Shanmugasundaram (Vice President)
- Mr. Inbaraj Baskara (Treasurer)
- Mr. Ravi Natarajan (Joint Treasurer)
- Dr. Damodharan Kamatchi (Secretary)
- Mrs. Suvitha Nagarajan (Joint Secretary)
At this moment, I appreciate the tremendous dedication and tireless enthusiasm that each of you give to NTA and I hope that you will continue to provide your good support to strengthen our bond and encourage us to move forward.
As with every year, we have the exciting line up of events planned for this year starting with Deepavali kondattam on the 18th October 2025 at Wythenshaw Forum Hall.
Details for entries for our annual e-magazine, Thendral, will be available soon. Pechu potti is also being planned during December 2025, It will be hosted by our VP Mr Sureshkumar who will release the details soon.Please encourage all children in your regions to participate and contribute for the success.
We shall, in time honoured tradition, host a music event around Tamil New Year in April 2026, the details of which are being worked out. We have planned our annual committee meeting on 15th June 2024.
Please visit the site regularly for updates and I hope to see you at all our events this year with your family.
Thanking you once more for your continued support
Update for 2025-26
NTA 10K Run 2025
Run for Tamil Culture: Support NTA 10K Fundraiser!
Let’s hit the pavement for a powerful cause! On 18th May 2025, we are taking a little step to make a huge impact by running 10K in Manchester to support Northern Tamil Association UK — a dedicated charitable organisation committed to preserving the richness of Tamil language and heritage across the UK, as well as promoting the well-being of Tamil communities.
We’re stepping up to go the extra mile, to raise money not only for our local community but for charities all around the world.
Join us in this new action of celebrating and supporting Tamil culture.
Support us – https://ajbellgreatmanchesterrun2025.enthuse.com/northerntamilassociation/profile

Deepavali Kondattam 2025
Deepavali along with 39th Year celebration is planned for Saturday, 18th October at Wythenshawe
Forum Hall, Manchester.
The format would be the same as previous year’s events, regional competitions for children and
adults in various categories. Please book your tickets and participate in the mega Event. Booking details are below

Thendral Magazine (39th year Special Edition)
We are pleased to inform all of you that we are accepting entry for the next issue of Thendral Magazine

Public Speaking (Pechu potti) Event
NTA “பேச்சுப்போட்டி” is planned for Decemeber 2025. This will be the seventh year of public speaking competition for Tamil school students in the UK.

More details with regards to the event will be available soon
Tamil New Year concert
The 2026 Tamil New Year function has been provisionally scheduled for April 2026.
There will be a team of musicians from Tamil Nadu entertaining with their amazing music

I wish to thank all members of NTA for their continued support.
Kind Regards
Mr. Joseph Karuna
President, Northern Tamil Association
