அன்புள்ள தமிழ் நெஞ்சங்களே

வட தமிழ்ச் சங்கத் தலைவர் விடுக்கும் செய்தி

அன்பார்ந்த வட தமிழ்ச் சங்க உறுப்பினர்களே,

உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வணக்கமும் வாழ்த்துகளும்.

பிரித்தானிய ஒன்றியப் பேரரசின் வட தமிழ்ச் சங்கத்திற்கு, 2021 - 22 ஆம் ஆண்டுக்கான தலைவராக நானும், புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாகப் பின்வரும் அங்கத்தினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இவர்களோடு இணைந்து உங்களுக்குப் பணியாற்றும் தனிச்சிறப்பான பேறும் நான் பெற்றுள்ளேன் என்று தெரிவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

1. முனைவர் சந்தான கிருஷ்ணன் பாலசுப்ரமணியன் - துணைத் தலைவர்
2. திருமதி கிருஷ்ணவேணி சுப்பிரமணியம் - செயலாளர்
3. திருமதி பிரியா நாராயணன் - பொருளாளர்.
4. திரு அமர்நாத் மணிபாரதி - இணைச்செயலாளர்.

நம் சங்கத்தின் குறிக்கோள்களையும் இலட்சியங்களையும் உயர்த்திப் பிடிக்கவும், அவற்றை நிலைநிறுத்தவும், நம்முடைய அறப்பணிகள் சார்ந்த செயற்பாடுகளின் அடிப்படைத் தத்துவங்களைப் பாரறியச் செய்திடவும், நமது சங்கத்தின் இயக்கத்தை மேலும் விரிவாக்கிடவும் நாங்கள் பாடுபடுவோம்.

ஆதாய நோக்கம் இல்லாத அறப்பணி நிறுவனமாக செயற்பட்டு வருகின்ற வட தமிழ்ச் சங்கம், இந்த 2021 ஆம் ஆண்டில் தன்னுடைய 35 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்காக, உறுப்பினர்களாகவும் நலம் விரும்புவோராகவும் உள்ள உங்கள் அனைவருக்கும் "இதயம் கனிந்த நன்றிகள்" என்று விண்ணதிர முழங்கிட விழைகிறோம். நாம் பயணித்து வந்துள்ள இந்த நெடும் தொலைவைக் கொண்டாடி மகிழ்ந்து போற்றும் வகையில், நிகழவிருக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக வ த ச (வட தமிழ்ச் சங்கம்) மிகச்சிறந்த திறமையும் ஆற்றலும் கொண்ட - பெயரும் புகழும் ஈட்டியுள்ள திரை இசைப் பாடகர்கள் அடங்கிய ஓர் இசைக் குழுவின் "இசைக் காட்சிப் பதிவு" வெளியிடப் பட இருக்கிறது என்னும் இனிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இந்தக் காட்சிப் பதிவில் இடம் பெறும் பாடல்களின் கருத்தும் உள்ளடக்கமும் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியன சார்ந்ததாக, அவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். நாங்கள் ஜூலை 7 ஆம் நாளில் (07.07.21) இந்த இசைக் காட்சிப் பதிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த வெளியீடு பற்றிய செய்தி விரைவில் வெளிவரும்.

2021 - 22 ஆம் ஆண்டில் நம் சங்கம் மேற்கொள்ளவிருக்கும் புதிய உத்தேசப் பணிகள் வருமாறு:

வலைத்தள உருவாக்கம் வெளியீடு:

புதிதாக நாங்கள் வடிவமைத்துள்ள வலைத்தளத் தொடக்கவிழா பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் உணர்ச்சிப் பெருக்கும் உவகைப் பெருக்கும் அடைந்துள்ளோம். பின்வரும் வலைத்தளத்திற்கு வருகை தந்து எங்களைக் காண்க: www.northerntamilassociation.org.uk

நம்மைச் சந்திக்க விழையும் பார்வையாளர்கள் - நம் வலைத்தள வருகையாளர்கள் - நம்மைக் குறித்த தகவல்களை எவ்வித இடர்பாடும் இன்றி எளிதில் பெற்றிட வகை செய்தல் வேண்டும் என்பதே, இந்தப் புதிய வலைத்தளத்தை வெளியிடுவது தொடர்பான நமது இலக்கும் குறிக்கோளும் ஆகும். நாம் யார், நமது மக்கள் யார் - எவர், நம்முடைய இயக்கப் பணிகளும் நிகழ்வுகளும் யாவை, நமது சங்க உறுப்பியம் எத்தகையது என்பனவற்றைத் திரட்டுவதற்கு, நமது புதிய வலைத்தளம் சிறப்பான முறையில் அணுகுவதற்கு வழிவகை செய்கிறது.

நமது வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் சிலவற்றைக் குறிப்பிட விழைகிறேன். இந்த வலைத்தளத்தில், பின்வரும் ஒருங்கிணைந்த சமூக ஊடகங்களுக்கான விசைப் பொத்தான்கள் இடம் பெறுகின்றன. முகநூல், சுட்டு ரை, பணி வாய்ப்பு இணைவகம், வலையொளி மற்றும் படவரி. நம் சங்க நடவடிக்கைகள் தொடர்பான மேம்பட்ட தொடர்பு வசதிகளை வழங்குவதற்காகவே இவையெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்தில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்கள் யாவும், சிறப்பாக உதவும் வகையில் அமைந்த தகவல்கள், சங்க நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள், செய்தி மடல்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் நாளதுவரையிலான தகவல்கள் முழுமையாக இடம்பெற்றிடும் வகையில் வலைத்தளம் சிறப்பாக இயக்கப் பெறும். நமது வலைத்தளத்தில் உலா வருவதன் மூலம், உங்களுடைய சுற்றத்தினரையும் நட்பு வட்டத்தையும் சங்கத்தின் உறுப்பினராவதற்கு அன்பு கூர்ந்து ஊக்குவித்திடுமாறு உங்களை வேண்டுகிறேன்.

தீபாவளிக் கொண்டாட்டம் 2021

நமது சங்கத்தின் 35 ஆம் ஆண்டு விழாவும் தீபாவளித் திருநாள் விழாவும் மான்செஸ்டரில் உள்ள விதென்ஷா மன்றக் கூட்ட அரங்கத்தில், இந்த ஆண்டு அக்டோபர்த் திங்கள் 23ஆம் நாளில் நடைபெறும். இதில் பங்கேற்கும் அனைவரும் நேரில் கலந்து கொள்ளும் விழா நிகழ்ச்சியாக இதனை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். ஆனால், நடத்தப்பெறும் விழாக்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும், கொரானா தீ நுண்மி கால வழிகாட்டுக் குறிப்புகளின் அடிப்படையிலேயே நடைபெறும் என்பதை உறுதி செய்கிறேன். இந்தப் பெருவிழா நிகழ்ச்சிகளை மிகப் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்குத் தேவையான அளவிற்கு அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.

விழா நடவடிக்கைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் யாவும் கடந்த ஆண்டில் நடைபெற்ற வற்றைப் போன்றே - அவற்றைப் பின்பற்றியே - அமைந்திருக்கும். அவை வருமாறு: பல்வகைக் கலை - பண்பாட்டு நிகழ்ச்சிகளில், சிறுவர் சிறுமியர், பெரியவர்கள் கலந்து கொள்ளும் வட்டார அளவிலான போட்டிகள் யாவும் அவற்றை ஒட்டி, அதே முறையில் ஏற்பாடு செய்யப்படும். இதுபற்றிய விளம்பரச் செய்திகளையும், நிகழ்வுகளில் கலந்து கொள் ளப் பதிவு செய்தல் குறித்த விவரங்களையும், நமது சங்கத்தின் செயற்குழுக் கூட்டங்களிலும், சமூக ஊடகத் தளங்களிலும் விரைவில் நாங்கள் இடம் பெறச் செய்வோம். சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் விழா நிகழ்வுகளிலோ போட்டி நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள விரும்பினால், உங்களுடைய வட்டார ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். தங்களின் தனிச்சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, மக்கள் கூட்டத்தைக் கவர்ந்து மகிழ்ச்சியூட்ட முடியும் என்று கருதுகின்ற ஒவ்வொருவரும், இது பற்றித் தங்கள் வசிப்பிடம் சார்ந்த உள்ளூர்க் குழுவினரிடம் தெரிவித்தல் வேண்டும்; அதைப் பற்றிய மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள, வ த ச வலைத் தளத்தில் உலா வர நம்மவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று விழைகி றேன்.

தென்றல் ஆண்டுமலர் (35 ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடு)

நமது "தென்றல்" இதழின் அடுத்து வரும் பதிப்பு, நம் சங்கத்தின் 35ஆம் ஆண்டு மலராக, சிறப்பு வெளியீடாக வெளிவரும். இந்த ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டத்தை ஒட்டி அது வெளியிடப்படும் என்பதை நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். "தென்றல்" தீபாவளி வெளியீடாக வெளிவரவிருக்கும் ஆண்டு மலரில், இடம் பெறக் கூடிய - மொழி, இலக்கியம், பண்பாடு சார்ந்த உங்கள் படைப்புகளை- அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றேன். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், சித்திரம், வண்ண ஓவியம், புகைப்படம், சமையல் குறிப்பு, கோலம் (ரங்கோலி) முதலான எல்லாவகை படைப்பாக்கங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன். அவ்வாறே, நம் சங்க உறுப்பினர்களும் தங்களுடைய படைப்புகளை அனுப்பிடுமாறு நான் வேண்டிக் கேட்டுக் கொள்ளுகின்றேன். இதைப் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும். விருப்பமும் ஆர்வமும் உடையவர்கள் அனைவரும் தங்கள் படைப்புகளை ntaukorg @gmaim.com என்னும் நம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், படைப்பாளிகள் தங்கள் பெயர்களைத் தம் படைப்புகளில் குறிக்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன். படைப்பு பற்றிய சிறு குறிப்பும் அவர்களது மின்னஞ்சலில் இடம்பெறவேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சுப் போட்டிகள்

வ த ச ஏற்பாட்டிலான பேச்சுப் போட்டிகளை 2021 ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 4 ஆம் நாள் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஒன்றியப் பேரரசில் வாழும் தமிழ்ப் பள்ளிப் பிள்ளைகளுக்காக, தொடர்ந்து நான்காவது ஆண்டாக, நமது சங்கத்தால், இந்தப் பொதுப் பேச்சுப் போட்டி நடத்தப்படவிருக்கிறது.

நம் சங்கத் துணைத் தலைவர் டாக்டர் சந்தானகிருஷ்ணன் பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்தப் பேச்சுப் போட்டியைப் பொறுப்பேற்று நடத்துகிறார். லெய்செஸ்டரில் உள்ள தமிழ்ப் பள்ளி இவருக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்குகின்றது. உங்கள் வசிப்பிடம் சார்ந்த தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு ஊக்கம் அளித்திட அன்பு கூர்ந்து வேண்டுகின்றேன்.

தமிழ்ப் புத்தாண்டு இன்னிசை நிகழ்ச்சி:

2022 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தின விழாவை (6.3.22) மார்ச் திங்கள் ஆறாம் நாளில் கொண்டாடுவது என்று தற்காலிகமாக முடிவு செய்துள்ளோம். இந்த நாளைக் குறிப்பாகக் கவனத்தில் கொள்ளுங்கள். அன்புகூர்ந்து உங்கள் நாட்குறிப்பேட்டிலும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த விழா நாளில், சென்னையிலிருந்து கலைஞர்கள் வருகைதந்து பங்கு கொள்வர். பல்வகைக் கலை நிகழ்ச்சிகளும் வேடிக்கை நிகழ்ச்சிகளும் இனிதே நடைபெறும்.

அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் பொதுக்குழுக் கூட்டம்:

இதுபற்றி விரைவில் தகவல்கள் வெளியாகும். வ த ச உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்காக, நான் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த நன்றியைச் சம்ர்ப்பிக்கின்றேன்.

பேரன்புடனும் மதிப்புடனும், சிவபாலன் பாலச்சந்திரன் குழுவின் அனைவர் சார்பாகவும்

மின்னஞ்சல் :

கைப்பேசி :

President Message

Dear Members of Northern Tamil Association,
Greetings to all of you!
It is my privilege and honour to serve as the new president of Northern Tamil Association UK for the term 2021-2022 together with my new executive committee team:
We strive to raise the bar of our association to serve and uphold the association’s objects and principles of our charitable work.
Northern Tamil Association UK as a non-profit charity organisation is celebrating its 35th anniversary this year in 2021. We want to say a big THANK YOU to all members and well-wishers for your continued support.
To commemorate this milestone, I am pleased to share with you all that NTA is releasing a music video featuring the most talented and famous play back singers. The theme of the song is based on Tamil language, literature and culture.
We are planning to release the music video on 7th July 2021. Information about this launch will follow soon.

Update for 2021-22

Website

We are extremely excited to announce the launch of our newly designed website. Visit us at www.northerntamilassociation.org.uk
Our goal with this new website is to provide our visitors an easier way to browse information. The new website gives better access to Who we Are, Our People, Events and Membership.
Amongst the new features the site contains integrated social media buttons for Facebook, Twitter, LinkedIn, YouTube and Instagram to foster improved communication with the activities. We will be constantly updating our content with helpful information, event announcements, newsletter and Blog.
Please encourage your friends and family to takeout membership through our website.

Deepavali Kondattam 2021

Deepavali along with 35th Year celebration is planned for Saturday, 23rd October at Wythenshawe Forum Hall, Manchester.
The plan is to conduct this as in-person event (subject to COVID-19 organised events guidance). We will take adequate safety measures to conduct the event in the safest possible way.
The format would be the same as previous year events, regional competitions among children and adults in various cultural events. We will soon post the flyers and registration information about the event in our committee group and social media platforms.
Children or adults interested to perform please contact your regional co-ordinators. We encourage everyone who can entertain the crowd with their fantastic talent to contact local committee member or visit NTA website for details.

Thendral Magazine (35th year Special Edition)

We are pleased to inform all of you that the next edition of Thendral magazine will be published on our Deepavali event. This will be our 35th year special edition.
We invite articles for the magazine like literature, write ups, narratives, drawing, paintings, photography, Poetry, Cooking, Rangoli, etc. All the members are invited to give the contributions for the same. Information will be posted soon, interested people are requested to email their articles to ntaukorg@gmail.com (kindly mention the name of the person in the subject) and brief description about the work.

Peachupotti

NTA “பேச்சுப்போட்டி” is planned for Saturday, 4th December 2021. This is our fourth continuous year of public speaking competition for Tamil school students in the UK.
Dr. Santhanakrishna Balasubramanian (Vice president) is spearheading the event with support from British Tamil School, Leicester
Please encourage your local Tamil schools to take part in this competition.

Tamil New Year concert

The 2022 Tamil New Year function has been provisionally scheduled for Sunday, 6th March 2022. Please make a note of this date as well in your diary; there will be artist from Chennai with more variety of programmes and fun.

Next AGM for all members

Further information about this will follow soon.
I wish to thank all members of NTA for their continued support.
Kind Regards

Mr. Sivabalan Balachandran

President – Northern Tamil Association